×

மதுராந்தகம் நகராட்சியில் வியாபாரிகளுக்கு சிறிய உணவக கிச்சன் பாக்ஸ்: நகர தலைவர் மலர்விழிக்குமார் வழங்கினார்

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளின் தெரு ஓரங்களில் இட்லி, வடை, தோசை சமைத்து விற்பனை செய்யும் பெண்களை நகராட்சி நிர்வாகம் கணக்கீடு செய்து வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாடு திட்டத்தின் மூலம் நவீன சமையல் உபகரணங்களுடன் சுகாதாரமான முறையில் சமைத்து வழங்கக்கூடிய சிறிய உணவகம் நடத்துவதற்கான கிச்சன் பாக்சை 19 பெண்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஆண்டவன் தலைமை தாங்கினார். பொறியாளர் நித்தியா, மேலாளர் ஏழுமலை, நகர அமைப்பு ஆய்வாளர் முரளி, பொது பணி மேற்பார்வையாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமுதாய மேற்பார்வையாளர் மாரியம்மாள் அனைவரையும் வரவேற்றார். இதில், நகர மன்ற தலைவர் மலர்விழிக்குமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கிச்சன் பாக்ஸ் எனப்படும் சிறிய ஓட்டல் நடத்துவதற்கான ஆணையினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், திமுக நகர செயலாளர் குமார் உள்ளிட்ட தெருவோர வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post மதுராந்தகம் நகராட்சியில் வியாபாரிகளுக்கு சிறிய உணவக கிச்சன் பாக்ஸ்: நகர தலைவர் மலர்விழிக்குமார் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Madurathangam ,Municipal President ,Malarvizhikumar ,Madhurandakam ,Maduraandakam ,Dinakaran ,
× RELATED அழகப்பபுரம் பேரூராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு