×
Saravana Stores

மதுராந்தகம் எம்எல்ஏவின் மாமனார் உடல் நலக்குறைவால் மரணம்: அனைத்து கட்சியினர் அஞ்சலி

திருப்போரூர்: மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேலின் மாமனார் கே.சுப்பிரமணி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இவரது உடலுக்கு அனைத்து கட்சியினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முன்னாள் காஞ்சிபுரம் எம்பியும், தற்போதைய மதுராந்தகம் எம்எல்ஏவுமான மரகதம் குமரவேலின் மாமனாரும், தையூர் ஊராட்சி மன்ற தலைவரும், அதிமுக திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரவேலின் தந்தையுமான கே.சுப்பிரமணி (78) நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அதிமுகவினர் திரண்டு வந்து குமரவேலின் தந்தை சுப்பிரமணி மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நேற்று முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கோகுலஇந்திரா, மாபா பாண்டியராஜன், பெஞ்சமின், சோமசுந்தரம் ஆகியோரும், முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் தண்டரை மனோகரன், வாலாஜாபாத் கணேசன், அதிமுக மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் அதிமுக ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், திமுக, பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டு, மறைந்த சுப்பிரமணிக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, நேற்று பகல் 1 மணியளவில் தையூர் கிராமத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

The post மதுராந்தகம் எம்எல்ஏவின் மாமனார் உடல் நலக்குறைவால் மரணம்: அனைத்து கட்சியினர் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Madhurandagam ,MLA ,Tirupporur ,Madhuranthakam ,Marakatham Kumaravel ,K. Subramani ,Kanchipuram ,Madhurandakam MLA ,Taiyur Panchayat Council ,Maduraandakam ,
× RELATED மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் ஆம்ஆத்மி எம்எல்ஏ கைது