×

சாலையை கடக்கும்போது மாநகர பேருந்து மோதி ரவுடி பலி

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர், புத்துக்கோயில் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகன் பூமிநாதன்(24). இவர் பெயின்ட்டர் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு கூடுவாஞ்சேரி ரயிலில் வந்து இறங்கிய பூமிநாதன் கூடுவாஞ்சேரி சிக்னலை கடந்து அங்குள்ள தடுப்பு சுவர்மீது எகிறி குதித்து சாலையை கடக்க முயன்றார்.

அப்போது சென்னை, தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த வழித்தட எண் 500 ஏ என்ற மாநகர பேருந்து பூமிநாதன் உடல் மீது மோதி ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூமிநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

The post சாலையை கடக்கும்போது மாநகர பேருந்து மோதி ரவுடி பலி appeared first on Dinakaran.

Tags : Kuduvanchery ,Jayaseelan ,Puthukoil ,Periyar Nagar ,Nandivaram-Kudovanchery Municipality ,Bhuminathan ,Bhumi Nathan ,Guduvancheri ,
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்