×

முதலமைச்சர் விளையாட்டு கோப்பை தடகளப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராடு

 

திருத்துறைப்பூண்டி, செப், 28: முதலமைச்சர் விளையாட்டுகோப்பை தடகளப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூணிற புனித தெரசாள் மெட்ரிக் உயா நிலைப்பள்ளி மாணவிகள் திருவாரூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்யைக்கான சிலம்பம் மற்றும் தடகள போட்டியில் வெற்றி பெற்றனர். மாணவிகளை பள்ளி முதல்வர் ஜெயராணி பாராட்டினார்.

இதில் சிலம்பம் போட்டியில் முதல் இடம் கனிஷ்கா, இரண்டாம் இடம் லோகேஸ்வரி கணிகா மூன்றாம் இடம்சுபஸ்ரீ குமமும் தடகள போட்டியில் 3ம் இடமும் தட்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடமும். பெற்று சாதனை படைத்தனர். மேலும் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவிகள் மாநில அளவிலான நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு பெற்றனர். மாணவிகள் வெற்றிபெற உறுதுணையாக இருந்த சிலம்பம் தலைமை பயிற்சியாளர் முத்துக்குமரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் இலக்கியா ஆகியோரை பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

 

The post முதலமைச்சர் விளையாட்டு கோப்பை தடகளப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராடு appeared first on Dinakaran.

Tags : Chief Minister's Sports Cup ,Thirutharapoondi ,Tiruvarur District ,St. Theresa Matric ,Uya Secondary School Girls Thiruvarur District ,Dinakaran ,
× RELATED திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டூர்...