திருத்துறைப்பூண்டி, டிச. 19: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டூர் மரைக்காகோரையாற்றில் மண்டிக்கிடக்கும் வெங்காய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆட்டூர் மரைக்காகோரையாற்றில் மண்டி கிடக்கும் வெங்காய தாமரை செடியினால் பல கிராங்களில் மழைக்காலங்களில் விளைநிலங்களில் தேங்கிய மழை நீரை வடிய வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள், வெங்காய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
The post திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டூர் மரைக்காகோரையாற்றில் மண்டிக்கிடக்கும் வெங்காய தாமரை செடிகள் appeared first on Dinakaran.