×

மாற்றுத்திறனாளிகளுடன் வாக்குவாதம் செய்த பெண் அதிகாரி குடியாத்தத்தில் பரபரப்பு வாராந்திர சிறப்பு முகாம்

குடியாத்தம், செப். 27: குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுடன் பெண் அதிகாரி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குடியாத்தம் நகராட்சி மேல்நிலை பள்ளி வளாகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இங்கு குடியாத்தம், பேரணாம்பட்டு, கே வி குப்பம், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து மாற்றும் திறனாளிகள் வருகை தருகின்றனர். அதன்படி நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம நடைபெற்றது இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் புதிய அட்டை பதிவு செய்யப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் புதிய அட்டையை பதிவு செய்ய வருகை தந்தார்கள். அப்போது மாற்றுத்திறனாளிகளின் விபரங்களை விண்ணப்பம் பதிவு செய்யும் பெண் அலுவலர் ஒருவர் மாற்றுத்திறனாளிகளை ஒருமையில் பேசி, டாக்டர் இன்னும் வரவில்லை என கூறி அறை விட்டு வெளியே செல் என கூறியுள்ளார். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கும் பெண் அதிகாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிலர் பதிவு செய்யாமல் திரும்பி வீட்டிற்கு சென்று விட்டனர். மேலும் முகாமுக்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளுக்கு குடிநீர், கழிப்பிட வசதி இல்லாமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார் இங்கு பங்கேற்ற 50க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 15 க்கும் மேற்பட்டோருக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டன.

The post மாற்றுத்திறனாளிகளுடன் வாக்குவாதம் செய்த பெண் அதிகாரி குடியாத்தத்தில் பரபரப்பு வாராந்திர சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Kudiatham ,Kudiatham Municipal High School ,Peranampatu, K ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளிகளை தரம் உயர்த்த...