×

நீடாமங்கலம் பகுதியில் சம்பா சாகுபடிக்கு இயந்திர உழவுப் பணிகள் மும்முரம்

 

நீடாமங்கலம், செப். 25: நீடாமங்கலம் வேளாண் கோட்டப்பகுதியில் சம்பா சாகுபடிக்கு இயந்திர உழவுப்பணிகள் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளான கிழக்குப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரை நம்பி சம்பா சாகுபடி செய்வது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நிறந்த தண்ணுர் கோரையாறு, பாமனியாறு வெண்ணாறுகளில் வந்து பாசன வாய்க்காலககளில் திறக்கப்பட்டு சம்பாசாகுபடி கானூர், பருத்திக்கொட்டை,

தேவங்குடி, கீழாள வந்தச்சேரி, மேலாளர் வந்தச்சேரி, அரிச்சபுரம், சித்தாம்பூர், அதங்குடி, அனுமந்தபுரம், தண்டாலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சம்பா சாகுபடி பணியை பல்வேறு விதைகளை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.  சாகுபடி பணிக்கு ஆற்று நீரை பயன்படுத்தி நாற்றங்கால் சீர்செய்து நாற்றங்காலில் மண் வெட்டி பணி அல்லது உழவுசெய்து விதை விட்டு நடவு பணிக்காக தற்பொழுது இயந்திரம் மூலம் ஆங்காங்கே உழவுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

The post நீடாமங்கலம் பகுதியில் சம்பா சாகுபடிக்கு இயந்திர உழவுப் பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Tiruvarur district ,Mettur dam ,
× RELATED கருவாக்குறிச்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்