- கலைஞரின் வருகை
- கருவாக்குறிச்சி
- மன்னார்குடி
- சாத்தனூர் ஊராட்சி
- முக்குளம், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்
- நீடாமங்கலம் ஒன்றியக்குழு
- ஜனாதிபதி
- சோமா…
மன்னார்குடி, டிச. 21: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த முக்குளம் சாத்தனூர் ஊராட்சி கருவாக்குறிச்சி கிராமத்தில் கலை ஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத் துவ முகாம் நேற்று நடந்தது. முகாமை நீடாமங்கலம் ஒன்றிய குழு தலை வர் சோம செந்தமிழ் செல்வன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில், மாவட்ட ஊராட்சி மற்றும் திட்ட குழு தலைவர் பாலு சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம் மற்றும் மருத் துவ காப்பீடு அட்டைகளை வழங்கி பேசினார்.
கலைஞரின் வருமுன் காப் போம் திட்டத்தின் கீழ் பொது மருத்துவம் அறுவை சிகிச்சை குடல் நோய் குழந்தைகள் நல மருத்துவம் போன்றவைகளுக்கு சிறப்பு மருத்துவர்களால் முதல் தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கருவாக் குறிச்சி கிராமத்தில் நேற்று நடந்த முகாமில் 500க்கு மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்தனர். நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், ஒன்றிய குழு துணைத் தலைவர் ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் சங்கீதா செல்வேந் திரன், ஒன்றிய குழு உறுப்பினர் பாரதிமோகன், ஊராட்சி மன்ற தலை வர் வீரா தேசபந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post கருவாக்குறிச்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் appeared first on Dinakaran.