×

திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

திருத்துறைப்பூண்டி, செப். 25: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரி ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பைக் டாக்ஸியை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஐடியூ நகர தலைவர் புருஷோத்தாமன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் நபி. ஜோதிபாசு மாவட்ட துணை தலைவர் பழனிவேல், சிஐடியூ நகர ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ், சிஐடியூ மாவட்ட பொருளாளர் மாலதி,

ஆட்டோ தொழிலாளர் சங்கம் மாவட்ட தலைவர் செல்வம், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகப்பா, செந்தில், அன்புமணி, பாஸ்கரன்,செந்தில், பன்னீர், ஆனந்த் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பைக் டாக்ஸியை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

The post திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Auto Workers' Union ,Thirutharapoondi ,Thandalaicherry Auto Labor Union ,Tiruthurapoondi ,Tiruvarur ,Thiruthurapundi ,
× RELATED போதை பொருட்கள் எதுவும்...