×

போதை பொருட்கள் எதுவும் கடத்தப்படுகிறதா? 25 போலீசார் களமிறங்கி ரயில் பயணிகளிடம் அதிரடி சோதனை குற்ற செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை டிஎஸ்பி எச்சரிக்கை

திருத்துறைப்பூண்டி, டிச.2: போதை பொருட்கள் எதுவும் கடத்தப்படுகிறதா? என்று திருத்துறைப்பூண்டி ரயிலில் இறங்கும் பயணிகளிடம் 25 போலீசார் களமிற ங்கி மெட்டல் டிடெக்டர் சோதனை நடத்தினர். குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருத்துறைப்பூண்டியில் டிஎஸ்பி பாஸ்கரன் எச்சரி க்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் அபின் கொக்கேன் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடிய பொருட்கள் கடத்தும் நபர்களை தமிழக முழுவதும் போலீசார் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகின்றனர். மேலும் மாநிலங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து போதை பொருட்கள் எதுவும் கடத்தப்படுகிறதா என ஆங்காங்கே போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனைகள் நடைபெற்று வருகிறது. இதனால் குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாக பொதுமக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவா ரூர் மாவட்ட எஸ்.பி.ஜெய க்குமார் உத்தரவின் பேரில் திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார் மற்றும் யுவராஜ் மற்றும் மகளிர் காவல் நிலைய போலீசாரும் இணைந்து 25க்கும்மேற் பட்ட போலீசார் திருத்துறைப்பூண்டி ரயில் நிலைய த்தில் நேற்று முன்தினம் இரவு சோதனை மேற்கொ ண்டனர்.அப்போது காரைக்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் ரயில் நேற்று இரவு 8 மணிக்கு திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்துக்கு வந்தது. அந்த ரயிலில் இருந்து இறங்கி நூற்றுக்கணக்கான பயணிகளை முழுவதுமாக 25க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை செய்த பின்னரே அனுப்பினர்.

மேலும் ரயில் வழியாக பொருட்கள் எதுவும் கடத்தப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் எனவும் குற்ற செயல்கள் நடைபெறுவதை கண்டுபிடிக்கப்பட்டால் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படும் எனவும் டிஎஸ்பி பாஸ்கரன் தெரிவித்தார். மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து போதை பொருட்கள் எதுவும் கடத்தப்படுகிறதா என ஆங்காங்கே போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமை த்து வாகன சோதனைகள் நடைபெற்று வருகிறது. இதனால் குற்றச்செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாக பொதுமக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர்.

The post போதை பொருட்கள் எதுவும் கடத்தப்படுகிறதா? 25 போலீசார் களமிறங்கி ரயில் பயணிகளிடம் அதிரடி சோதனை குற்ற செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை டிஎஸ்பி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : DSP ,Thiruthurapundi ,Thirutharapoondi ,Bhaskaran ,Tiruthurapundi ,Dinakaran ,
× RELATED திருவாடானையில் டிஎஸ்பி அலுவலகத்தில் பெட்டிசன் மேளா