×

டாக்டர் சுப்பராயன் நினைவு அரங்கம் பணிகள் தீவிரம்

சேந்தமங்கலம், செப்.24: புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், ₹2.50 கோடியில் முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயனின் நினைவு அரங்கம் அமைக்கும் பணியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அரங்கம் அமைக்கும் பணி தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. டாக்டர் சுப்பராயன் அரங்கத்தில், ஆழ்துளை கிணறு வசதி, திருமண மண்டபம், உணவு அருந்தும் கூடம், பொதுமக்கள் அமருமிடம் ஆகியவை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயனின் மார்பளவு சிலை நிறுவும் பணியும் நடந்து வருகிறது. அடுத்த மாதம் இறுதிக்குள் அரங்கம் கட்டுமான பணி நிறைவு பெறும் எனவும், அதன் பின் திறப்பு விழா நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post டாக்டர் சுப்பராயன் நினைவு அரங்கம் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Dr. Subparayan Memorial Hall ,Senthamangalam ,Chief Minister ,M. K. Stall ,Dr. ,Subparayan ,Puduchattaram Panchayat Union ,Dr. Subparayan Memorial Stadium ,Dinakaran ,
× RELATED குவாரி குட்டையில் குளிக்க தடை விதிப்பு