×

மிலாடி நபி பேரணி

கூடலூர், செப்.21: தேவர் சோலை பஜாரில் தேவர் சோலை முஸ்லிம் ஜமாத் மண்டல கமிட்டி சார்பில் மிலாடி நபி ஊர்வலம் நடத்தப்பட்டது. ஒற்று வயல் சாலை பிரிவு பகுதியில் இருந்து துவங்கிய பேரணி தேவர் சோலை பஜார் வழியாக சென்று பேருந்து நிலையம் பகுதியில் முடிவடைந்தது. பேரணியில் அலி அக்பர் தங்கள், சிகேகே மதனி, டிகேஎம் பாடந்துறை, இஸ்மாயில் மதனி, அசிஸ் அன்வரி, மொய்தின் பைசி, அகமது முஸ்லியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாபீர் சஹாபி மற்றும் சுலைமான் சஹாபி ஆகியோர சிறப்புரையாற்றினர்.

The post மிலாடி நபி பேரணி appeared first on Dinakaran.

Tags : Milady Nabi rally ,Cudalur ,Milady Nabi ,Dewar Cholai Muslim Jamaat Zone Committee ,Dewar Cholai Bazaar ,Dewar Solai Bazar ,Dinakaran ,
× RELATED பட்டாசு வெடித்தவருக்கு அபராதம்