×
Saravana Stores

ஆன்லைன் ரம்மி விளம்பரங்களை மத்திய அரசுதான் கட்டுப்படுத்த வேண்டும் : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை :ஆன்லைன் ரம்மி விளம்பரங்களை மத்திய அரசுதான் கட்டுப்படுத்த வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னையில் எம்.எல். படிப்புக்கான சேர்க்கை ஆணைகளை வழங்கிய அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் உள்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு மட்டும் ஏன் விலக்கு கேட்கிறது என்று விளக்கம் கேட்டு ஒன்றிய உள்துறை அமைச்சகம் 4வது முறை தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஒன்றிய அரசு கேட்ட கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு உரிய பதில் கடிதம் அனுப்பி உள்ளது.நீட் தேர்வு இல்லாமலேயே சிறந்த மருத்துவர்களை தமிழ்நாடு உருவாக்கியதை சுட்டிக்காட்டி உள்ளோம். நீட் தேவையில்லை என்பதற்காக தான் நாங்கள் இந்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளோம். தமிழ்நாடு அரசு அளித்த பதில்களால் நீட் விலக்கு தரவேண்டிய சூழல் ஒன்றிய அரசுக்கு ஏற்படும். நீட் தேர்வால் பயிற்சி மையத்தினருக்கே பலன்; கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு என்று பதிலளித்துள்ளோம்.ஆளுநரிடம் தற்போது ஒரே ஒரு கோப்பு மட்டும் நிலுவையில் உள்ளது. ஆன்லைன் ரம்மி விளம்பரங்களை மத்திய அரசுதான் கட்டுப்படுத்த வேண்டும். ஆன்லைன் ரம்பி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். தமிழகத்தில் பழமையான சிறைச்சாலைகள் தற்போது புதுப்பிக்கப்படுகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ஆன்லைன் ரம்மி விளம்பரங்களை மத்திய அரசுதான் கட்டுப்படுத்த வேண்டும் : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Central government ,Law Minister ,Raghupathi Petty ,Chennai ,Raghupathi ,M.L. ,Minister ,President ,
× RELATED கூட்டணியை பிரிக்கும் சதி நிறைவேறாது...