×

நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; திரையுலகின் மூத்த கலைஞர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்

மேடை நாடகங்களில் தொடங்கி 400-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர். குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் என, தான் ஏற்று நடித்த அனைத்து கதாபாத்திரங்களிலும் தன் முத்திரையை பதித்தவர்.
சின்னத்திரையிலும் தன்னுடைய நடிப்பாளுமையை வெளிப்படுத்திய திறமைக்கு சொந்தக்காரர். அவரின் மரணம் கலையுலகிற்கு பேரிழப்பு.

டெல்லி கணேஷ் சாரின் மரணத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவால் வாடும், குடும்பத்தார், நண்பர்கள், கலையுலகினர் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Assistant Secretary ,Stalin ,Delhi Ganesh ,Chennai ,
× RELATED உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை...