×

திமுக மாணவரணி நிர்வாகிகள் தேர்வு

நாமக்கல், செப்.18: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணிக்கான நேர்காணல் 21ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக மாநில மாணவர் அணி செயலாளர் அறிவித்துள்ளபடி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கான ஒன்றிய, நகர, டவுன், ஊராட்சி மாணவர் அணிக்கான நேர்காணல், வரும் 21ம் தேதி காலை 8 மணிக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாநில மாணவர் அணி இணைச்செயலாளர் மோகன், துணை அமைப்பாளர்கள் தமிழரசன், பொன்ராஜ், கோகுல் ஆகியோர் மாணவர் அணி நிர்வாகிகள் தேர்வுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நேர்காணலுக்கு விண்ணப்பித்த அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மாணவர் அணிக்கு விண்ணப்பித்துள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள், கல்விச் சான்றிதழ் மற்றும் உரிய சான்றுகளுடன், குறிப்பிட்டுள்ள நேரத்தில் வரவேண்டும். வரும்போது, உறுப்பினர் அட்டை, கட்சியில் ஆற்றிய பணிகள் குறித்த அனைத்து விபரங்களையும் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

The post திமுக மாணவரணி நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : DMK ,Namakkal ,Namakkal East District ,DMK Secretary ,Rajesh Kumar ,DMK State Student Team ,Namakkal East ,
× RELATED கரூர் நாமக்கல் பைபாஸ் சாலையோரம் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும்