தஞ்சாவூர்: வருகிற 2025 பிப்ரவரிக்குள் அதிமுக ஒன்றிணையும் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதிமுக உரிமை மீட்புக்குழு இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தஞ்சாவூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இபிஎஸ் அணியில் எப்போதும் ஓபிஎஸ் அணி இணைய முடியாது என்று இபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் சொல்லி உள்ளார். எடப்பாடி இதற்கு முன்னாடி சொல்லி இருக்கலாம். ஆனால் தற்போது அவர் சொல்லி இருக்கிறாரா? அதைப்பற்றி சொல்வதற்கு மற்றவர்களுக்கு ஒரு தகுதி வேண்டும்.
அப்படி வேறு யாராவது சொன்னால் அவர்கள் அந்த இயக்கத்தை விட்டு காணாமல் போய்விடுவார்கள். நாங்கள் ஐவர் அணி கிடையாது. நால்வர் அணி தான். அது அதிமுகவின் உரிமை மீட்புக்குழு என்கிறோம், பொது செயலாளர் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சர்வாதிகாரத்தால் விதியை மாற்றி இருக்கிறார்கள். தற்போது இணைவதற்கு நாங்கள் தடையாக இருக்க கூடாது என நினைக்கிறோம்.
அதனால் நான் வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை. என்னை விட அதிமுக வரலாற்றை சொல்லவோ, பேசவோ யாருக்கும் தகுதி இல்லை. 2026ல் இணைவதற்கு வாய்ப்பு என சொன்னேன். ஆனால் 2025 பிப்ரவரிக்குள் அதிமுக ஒன்றிணையும். 2026ல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும். நான் கரை வேட்டி கட்டக்கூடாது என இபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் கூறியுள்ளார். நான் கரை வேட்டி கட்டுறேன். எந்த நாயாவது வழக்கு போட சொல்லுங்க. இவ்வாறு அவர் கூறினார்.
The post 2025 பிப்ரவரிக்குள் அதிமுக ஒன்றிணையும்: நம்புகிறார் வைத்திலிங்கம் appeared first on Dinakaran.