- Bamaka
- பி.ஜே.பி கூட்டணி
- ராமதாஸ்
- திண்டிவனத்தில்
- Bhamaka
- பாஜக
- பாமா
- திலாபுரம்
- திண்டிவனம்
- விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனம்: பாஜ கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுகிறதா? என்பது குறித்து ராமதாஸ் பரபரப்பு பேட்டி அளித்து உள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பழையன கழிதலும்… புதியன புகுதலும்… வழுவல கால வகையினானே என்ற நன்னூல் என்னுடைய சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் போடப்பட்டதால் பாஜவிலிருந்து விலகுவதாக கருத்துகள் கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவுமில்லை, பாஜவிலிருந்து விலகவில்லை.
இது அரசியலுக்கு சம்பந்தமில்லை. சட்டசபை தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ளதால் பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து அறிவிப்போம். நன்னூல் சூத்திரத்தில் குறிப்பிட்டது, அரசியலுக்கும் கூட்டணிக்கும் பொருந்தாது. தமிழகத்தில் புதிதாக தொடங்கும் கட்சிகள் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் முன்னெடுப்பது குறித்து பதில் அளிக்க தயாராக இல்லை. எது சொன்னாலும் நளினமாகவும், நாகரிகமாகவும் இருக்க வேண்டுமென கலைஞர் கூறுவார். அதுபோல்தான் நாங்களும் உள்ளோம்.
வன்னியர் சங்கத்தின் தலைவர் கழுத்தை வெட்டுவோம் என்று கூறுகிறவர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல் துறை ஒருவருக்கு சார்பாக செயல்படுகிறது. எஸ்.சி எஸ்.டி. வழக்கு காவல் துறையினர் போடுகிறார்கள். நாங்கள் ஏமாளிகள் அல்ல. சிறைக்கு போவதோ, வழக்குகளை சந்திப்பதோ எங்களுக்கு புதிதல்ல. கடலூர் காவல்துறை வெறுப்பு இல்லாமல் ஆராய்ந்து அறிந்து நடந்து கொள்ள வேண்டும். ஒரு சார்பாக நடக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
*‘விசிக, பாமக மோதலை தடுக்க வேண்டும்’
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கருக்கு நேற்று வந்த பாமக தலைவர் அன்புமணி அளித்த பேட்டி: கடலூர் பகுதியில் விசிக, பாமக இடையே நடைபெற்று வரும் மோதலில் காவல்துறை ஒரு தலைபட்சமாகவே செயல்படுகிறது. தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு இந்த விவகாரத்தில் சுமுக முடிவை எடுக்க வேண்டும். 2026ம் ஆண்டு நடைபெறக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும். 2026 தேர்தலில் நிச்சயமாக கூட்டணி ஆட்சி தான் அமையும். இந்த கூட்டணி ஆட்சியில் பாமக இடம் பெற்றிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
The post பாஜ கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுகிறதா? ராமதாஸ் விளக்கம் appeared first on Dinakaran.