×
Saravana Stores

காதலனுடன் மணமகள் ஓட்டம் தங்கைக்கு தாலிகட்டிய மணமகன்

வேலூர்: மணப்பெண் காதலனுடன் ஓடியதால் அவரது தங்கைக்கு மணமகன் தாலி கட்டினார். வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண், பிஎஸ்சி பட்டதாரி. இவருக்கும், செங்கல் சூளை வைத்திருக்கும் உறவினரான 27 வயது வாலிபருக்கும் நேற்று கணியம்பாடி பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை இரு குடும்பத்தினரும் செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் காலை மணமகளுக்கு நலங்கு உள்ளிட்ட சடங்குகளை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. அப்போது மணமகள் திடீரென மாயமானதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. விசாரித்தபோது, மணப்பெண் காதலருடன் யாருக்கும் தெரியாமல் வெளியேறியது தெரியவந்தது. இதையறிந்து இருதரப்பு பெற்றோரும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். மகளை காணவில்லை என பெற்றோர் ேவலூர் தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

நிச்சயித்த பெண் காதலனுடன் ஓடிவிட்டதால் மணமகனின் குடும்பத்தினர் மணமகளின் பெற்றோரிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து மணப்பெண்ணின் தங்கையான 20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி நேற்று காலை அதே திருமண மண்டபத்தில் மணமகன், மணப்பெண்ணின் தங்கைக்கு தாலி கட்டி திருமணம் செய்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

The post காதலனுடன் மணமகள் ஓட்டம் தங்கைக்கு தாலிகட்டிய மணமகன் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Kanyambadi ,Vellore district ,
× RELATED வேலூர் அருகே தெரு விளக்கு கம்பம்...