×

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை ஓபிஎஸ் திட்டவட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று இரவு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர்வது குறித்து தேர்தல் வரும்போது தெரிவிக்கப்படும்.

2026க்கு முன்பாக அதிமுகவின் அனைத்து தொண்டர்களும் எழுச்சியோடு ஒன்று சேர்ந்து மீண்டும் அதிமுக ஆட்சியை நிலை நிறுத்துவார்கள். திராவிடம் குறித்து சீமான் பேசுவது அவருடைய வாதம். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை. முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் என்ன உடை அணிய வேண்டும் என்று எந்த சட்ட விதி முறையாவது இருக்கிறதா என்ன? உடை அணிவது அவரவர் விருப்ப உரிமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை ஓபிஎஸ் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Former ,Chief Minister ,O. Paneer Selvam ,Swami ,Vijay ,Supreme ,
× RELATED திருவண்ணாமலை மண் சரிவு: துணை முதல்வர் நேரில் ஆய்வு