×
Saravana Stores

தேர்வு நடைமுறைகள் முழுவதையும் வீடியோ எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் பேட்டி


சென்னை: தேர்வு நடைமுறைகள் முழுவதையும் வீடியோ எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் வணிக வரித்துறை கூடுதல் அலுவலர், உதவி பதிவாளர், சென்னை காவல் சிறப்பு பிரிவு அதிகாரி, கூட்டுறவு ஆய்வாளர் அறநிலையத்துறை கணக்கு ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட 2,327 இடங்களுக்கு முதல்நிலை எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. 2,763 மையங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 2,327 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் குரூப்-2 தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சம் பேர் எழுதிவருகின்றனர். சென்னையில் 251 தேர்வு மையங்களில் 75,185 பேர் குரூப்-2 தேர்வை எழுதுகின்றனர்.

தேர்வுகளை கண்காணிக்க வருவாய் துறையின் மூலம் 113 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தவிர, துணை கலெக்டர் நிலையில் 7 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வர்கள் வந்து செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மையத்தில் அதன் தலைவர் எஸ்.கே.பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், நடப்பாண்டில் 10 தேர்வுகளை நடத்த அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. தேர்வு நடைமுறைகள் முழுவதையும் வீடியோ எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். குரூப் 2 தேர்வு சுமூகமாக நடைபெற்று வருகிறது; தேர்வு மையத்தில் அடிப்படை வசதிகள் செய்துள்ளோம். விரைவாக தேர்வு முடிவுகளை வெளியிடவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு பேசினார்.

The post தேர்வு நடைமுறைகள் முழுவதையும் வீடியோ எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : TNPSC ,President ,S. K. ,Prabhakar ,Chennai ,S. K. Prabhakar ,Chennai Police ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளில்...