அரியலூர், செப். 13: அரியலூர் மயான பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதர் மண்டி கிடைக்கும் இடம் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயானத்தில் உள்ள மோட்டார் மற்றும் மின் வயர்கள் மாயம்? ஈமச்சடங்கு செய்பவர்கள் அவதிப்படுகின்றனர். அரியலூர் நகரில் உள்ள பகுதியில் இயற்கை எய்தியவர்கள் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள மயானத்தில் உடலை தகனம் செய்து ஈமச்சடங்குகள் செய்வது வழக்கம்.
அரியலூர் நகரில் உள்ள பகுதியில் இயற்கை எய்தும் உடல்கள் இடுகாட்டு பகுதியில் இறுதி சடங்கு செய்யப்படும் போது தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இல்லாததால் மிகுந்த அவதிக்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளது.தற்பொழுது எரியூட்டும் கட்டடத்தில் மூன்று தகன மேடைகள் உள்ளன. அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டி மின் மோட்டார் வசதி ஏற்கனவே இந்த நிலையில் தற்போது அப்பகுதியில் உலாவும் மது பிரியர்களின் அட்டகாசத்தால் மேல்நிலை பிளாஸ்டிக் டேங்க் உடைக்கப்பட்டு, அருகே உள்ள ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட மின்மோட்டார் மற்றும் ஒயர்கள் காணாமல் போய் உள்ளன.
இதனால் ஈமச்சடங்கு செய்வதில் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மயான பகுதியின் ஒரு புறம் மட்டுமே தடுப்புச் சுவர் உள்ள நிலையில் அப்பகுதிக்கான முழு இடங்களும் சுற்றுப் புற சுவர் அமைத்து மயான பகுதிக்கு உள்ளே உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட வேண்டும். தண்ணீர் வசதி உள்ளிட்டவைகள் சீர்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மிக முக்கிய நகர் பகுதி அப்பகுதியில் உள்ள பொது மக்கள் இறந்தவர்களுக்கான ஈமசட ங்கிற்கு பயன்படும் வகையில் இடுகாட்டு பகுதியை சீர்படுத்தி தர வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர். மின் மயானம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை கிடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post மோட்டார், மின் வயர்கள் மாயம் அரியலூர் மயானம் சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.