பெரியகுளம், நவ.10: பெரியகுளம் அருகே அடுத்தடுத்து கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியகுளம் அருகே தென்கரை தேனி- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் உள்ள இரும்பு கடையின் பூட்டை உடைத்து, கடையில் உள்ள பணப்பெட்டியில் இருந்த ரூ. 4000 மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
மேலும் பேட்டரி மற்றும் மெத்தை கட்டில் விற்பனை கடையிலும், கடைகளின் பூட்டை உடைத்தபின் ஷட்டரை உடைக்க முடியாத நிலையில் கொள்ளையர்கள் திரும்பிச் சென்றனர். மேலும் கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் கடைகளின் பூட்டை உடைப்பதற்கு முன்பாக கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்தபின் கொள்ளையடிக்க முயன்றது சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையடிக்க முயன்ற நபர்களை தேடி வருகின்றனர்.
The post பெரியகுளம் அருகே கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.