- அமைச்சர்
- சிப்கோட் டெக்ஸ்டைல் பார்க்
- சதுரூர்
- சாத்தூர்
- அமைச்சர் டி. ஆர்.
- சிப்கோட் டெக்ஸ்டைல்
- பூங்கா
- சதுர்
- தமிழ்நாடு தொழில் துறை
- சிப்கட் ஜவுளி பூங்கா
- Kumaralingapuram
- சிக்கோட் டெக்ஸ்டைல் பார்க்
- சத்தூர்
- தின மலர்
சாத்தூர், நவ. 10: சாத்தூர் அருகே நடைபெற்று வரும் சிப்காட் ஜவுளி பூங்கா கட்டுமான பணிகளை அமைச்சர் டிஆர்பி.ராஜா ஆய்வு செய்தார். சாத்தூர் அருகே இ.குமாரலிங்காபுரத்தில் நடை பெற்று வரும் சிப்காட் ஜவுளி பூங்கா கட்டுமான பணிகளை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், சிப்காட் ஜவுளி பூங்காவிற்கான கட்டுமான பணிகளை வெளி நபர்களை கொண்டு செய்ய நினைத்தது.
தமிழக அரசின் சிப்காட் துறையில் போதுமான அளவிற்கு பொறியாளர்கள், மற்றும் கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் சிப்காட் துறையே பணிகளை செய்ய முடிவு செய்யப்ப்பட்டது. ஆதனால் ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. தற்போது ஒன்றிய அரசிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் விரைவில் தேவையான நிதிகளை ஒதுக்க சம்மத்தித்துள்ளனர். விரைவில் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் பேசினார்.
The post சாத்தூர் அருகே நடைபெற்று வரும் சிப்காட் ஜவுளி பூங்கா கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.