×

காட்பாடி அருகே பொன்னையாற்று ரயில்வே பாலத்தில் விரிசல்: சென்னையில் இருந்து இயக்கப்படும் 22 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை:  காட்பாடி அடுத்த திருவலம் பொன்னையாற்று ரயில்வே பாலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதன்காரணமாக அவ்வழியாக செல்ல வேண்டிய  34 ரயில்கள் நேற்று முதல் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக பாலாற்றிலும் பொன்னையாற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போதும் இரண்டு ஆறுகளிலும் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. இதன் காரணமாக காட்பாடி- முகுந்தராயபுரம் இடையே திருவலம் பொன்னையாற்றின் மீதுள்ள நூற்றாண்டு பழமையான ரயில்வே பாலத்தின் 38, 39வது தூணுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டிருப்பதை நேற்று முன்தினம் வழக்கமான ஆய்வு பணியில் இருந்த ரயில்வே பொறியாளர் குழுவினர் கண்டுபிடித்தனர். உடனடியாக இதுபற்றி அக்குழுவினர் ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவ்வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. அந்த பாலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு பணிகள் குறித்து நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று வரை ரயில்வே பொறியாளர்கள் குழுவினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் மாலை ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்கள் பொன்னையாற்றின் மீதுள்ள மற்றொரு ரயில்வே பாலம் வழியாக ஒவ்வொன்றாக இயக்கப்பட்டன. அந்த பாதையில் இயக்கப்பட்டு வந்த 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை சென்ட்ரல்-மைசூர் இடையே காலை 6 மணிக்கு இயக்கப்படும் (12007) சதாப்தி எக்ஸ்பிரஸ், மைசூர்- சென்னை சென்ட்ரல் இடையே பிற்பகல் 2.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் (12008), சென்னை சென்ட்ரல்- கோவை இடையே இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் (12243), கோவை- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் (12244) சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல்- கேஎஸ்ஆர் பெங்களூர் இடையே காலை 7.25 மணிக்கு இயக்கப்படும் ரயில் (22625), கேஎஸ்ஆர் பெங்களூர்- சென்னை சென்ட்ரல் இடையே மாலை 5.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் (22626), கேஎஸ்ஆர் பெங்களூர்- சென்னை சென்ட்ரல் இடையே மாலை 5.30 மணிக்கு இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (12027), சென்னை சென்ட்ரல்-  கேஎஸ்ஆர் பெங்களூர் இடையே காலை 6 மணிக்கு இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் (12028), சென்னை சென்ட்ரல்- ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649), ஈரோடு- சென்னை சென்ட்ரல் இடையே இரவு 9 மணிக்கு இயக்கப்படும் (22650) ஏற்காடு எக்ஸ்பிரஸ், அதைப்போன்று சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் இடையே பிற்பகல் 3.20 மணிக்கு இயக்கப்படும் அதிவேகவிரைவு ரயில் (12695), திருவனந்தபுரம்- சென்னை சென்ட்ரல் இடையே மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் அதிவேக விரைவு  ரயில் (12696), சென்னை சென்ட்ரல்- மங்களூர் சென்ட்ரல் இடையே இயக்கப்படும் அதிவேக சிறப்பு ரயில் (22637), மங்களூர் சென்ட்ரல்- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் அதிவேக ரயில் (22638), அரக்கோணம்- ஜோலார்பேட்டை இடையே மாலை 6.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் (16085), ஜோலார் பேட்டை- அரக்கோணம் இடையே இயக்கப்படும் ரயில் (16086), சென்னை சென்ட்ரல்- ேஜாலார்பேட்டை இடையே மாலை 5.55 மணிக்கு இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் (16089), ஜோலார்பேட்டை- சென்னை சென்ட்ரல் இடையே காலை 5 மணிக்கு இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (16090), சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மெண்ட் இடையே மாலை 6 மணிக்கு இயக்கப்படும் ரயில் (06033), வேலூர் கன்டோன்மெண்ட்- சென்னை கடற்கரை இடையே காலை 6 மணிக்கு இயக்கப்படும் (06034) ஆகிய 20 ரயில்கள் இன்று மற்றும் நாளையும் ரத்து செய்யப்படுகிறது.அதைப்போன்று சென்னை சென்ட்ரல்- மேட்டுப்பாளையம் இடையே இரவு 9.05 மணிக்கு இயக்கப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ் (12671), மேட்டுப்பாளையம்- சென்னை சென்ட்ரல் இடையே இரவு 9.20 மணிக்கு இயக்கப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ் (12672) ஆகிய ரயில்கள் இன்று மட்டும் ரத்து செய்யப்படுகிறது.மேலும் மைசூர்- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ரயில் (12610), கேஎஸ்ஆர் பெங்களூர்- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ரயில் (12608), கோவை- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12680) காட்பாடி வரை இயக்கப்படும். அதைப்போன்று சென்னை சென்ட்ரல்- மைசூர் இடையே இயக்கப்படும் அதிவேக விரைவு ரயில் (12609), சென்னை சென்ட்ரல்- கேஎஸ்ஆர் ெபங்களூர் இடையே இயக்கப்படும் ரயில் (12607), சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12679) காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post காட்பாடி அருகே பொன்னையாற்று ரயில்வே பாலத்தில் விரிசல்: சென்னையில் இருந்து இயக்கப்படும் 22 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Cracks ,Bonnayadu Railway Bridge ,Gadbadi ,Chennai ,Southern Railway ,golden railway bridge ,
× RELATED காட்பாடி சன்பீம் பள்ளி மைதானத்தில் 3...