- பல்கலைக்கழக
- சேலம்
- சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
- அரசு மகளிர் கலைக் கல்லூரி
- சேலம் கோரிமேடு
- இன் முதல்வர்
- காந்திமதி
- பெரியார்...
- தின மலர்
சேலம், செப்.10: சேலம் பெரியார் பல்கலைக்கழக அளவில், கல்லூரி மாணவிகளுக்கான மல்யுத்த போட்டிகள், சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நேற்று நடந்தது. தொடக்க நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் காந்திமதி தலைமை வைத்து, போட்டிகளை தொடங்கி வைத்தார். பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். அரசு மகளிர் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சிவக்குமார் வரவேற்றார். போட்டிகளை கோபிகா ஒருங்கிணைத்தார்.
இப்போட்டியில் பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் செயல்பட்டு வரும், 20 கல்லூரிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் 50 கிலோ முதல் 76 கிலோ வரை, எடை அடிப்படையில் 10 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டன. மேலும் வெற்றி பெற்ற மாணவிகள், வரும் டிசம்பரில் நடைபெற உள்ள அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மல்யுத்த போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
The post பல்கலை. அளவிலான மல்யுத்த போட்டிகள் appeared first on Dinakaran.