×

ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் உதவி கமிஷனர் திடீர் ஆய்வு

ஆட்டையாம்பட்டி, நவ.6: ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன், கடந்த ஜனவரி மாதம் சேலம் மாநகர போலீஸ் ஸ்டேஷனுடன் இணைக்கப்பட்டது. இந்நிலையில், உதவி போலீஸ் கமிஷனர் வேல்முருகன் நேற்று ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகை புரிந்து, ஆய்வு மேற்கொண்டார். முதல் முறையாக நடைபெற்ற ஆய்வில், முழுமையாக போலீஸ் ஸ்டேஷன் அனைத்து பதிவேட்டினையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் மரக்கன்று நட்டார். அப்போது, இன்ஸ்பெக்டர் விதுன்குமார் மற்றும் எஸ்ஐக்கள், போலீசார் உடனிருந்தனர்.

The post ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் உதவி கமிஷனர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Attiyampatti Police Station ,Attaiyambatti ,Attaiyambatti Police Station ,Salem ,Metropolitan Police Station ,Assistant Commissioner ,Velmurugan ,Dinakaran ,
× RELATED தொடர் குற்றங்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டாசில் கைது