×

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்

 

இடைப்பாடி, நவ.8: இடைப்பாடி அருகே சித்தூரில் கல்யாண சுப்பிரமணி சுவாமி முருகன் கோயிலில் சஷ்டி விரதத்தையொட்டி, சுவாமிக்கு தினசரி சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி கோயில் முன் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, முருகா முருகா என கோசமிட்டனர். பின்னர் சுப்பிரமணியர் சுவாமிக்கு, பால் அபிஷேகம் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது.

இன்று (8ம் தேதி) வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பக்தர்கள் வருகையையொட்டி, பூலாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல், இடைப்பாடி முருகன் கோயிலிலும், கொங்கணாபுரம் தங்காயூர் புது பழனிமுருகன் கோயிலிலும் சூரசம்ஹார விழாவும், சிறப்பு பூஜையும் நடந்தது.

The post சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் appeared first on Dinakaran.

Tags : Surasamharam ,Subramanya Swamy Temple ,Eadpadi ,Shashti Vrat ,Kalyana ,Subramani ,Swamy Murugan Temple ,Chittoor ,Swami ,Surasamhara ,
× RELATED திருச்செந்தூர் கோயிலில் 7...