×

மாயமான 6ம் வகுப்பு மாணவன் மீட்பு

 

சேலம், நவ. 5: சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்தவர் லியாஸ்கான். இவரது மகன் ஐரீன்கான் (12). அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறான். நேற்று காலை ஐரீன்கான் வழக்கம் போல் பள்ளிக்கு ஆட்டோவில் சென்றான். இதனிடையே பள்ளி ஆசிரியை, ஐரீன்கானின் பெற்றோரை தொடர்பு கொண்டு, உங்களது மகன் பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளிக்கு சென்று மகன் பற்றி விசாரித்தனர். பின்னர் மகனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுபற்றி அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மாயமான ஐரீன்கான் பற்றி விசாரித்தனர். அதில், நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு ஆட்டோவில் வந்து ஐரீன்கான் இறங்கியுள்ளான். ஆனால் அவன் பள்ளிக்கு செல்லாமல் மணக்காட்டில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றிருப்பது தெரிந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த மாணவனை மீட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாயமான 6ம் வகுப்பு மாணவன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Little Tirupati ,Irene Khan ,Alaghapuram ,
× RELATED சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய குண்டூசி