×
Saravana Stores

டிஜிட்டல் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2.0 வெளியீடு: தமிழக அரசு தகவல்


சென்னை: டிஜிட்டல் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் இணையப் பாதுகாப்புக் கொள்கை 2.0வை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த் கொள்கையானது தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, நெட்வொர்க் அல்லது டிஜிட்டல் தரவுகளைப் பயன்படுத்தும் அனைத்து மாநில அரசு துறைகள், மாநில பொதுத்துறை பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் பிற பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருந்தும். இந்தக் கொள்கையானது அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு, மென்பொருள், குடிமக்கள் சேவைகள் ஆகிய தகவல்கள் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் விரிவான பாதுகாப்பு இடர்பாடுகளை குறைப்பதற்கான உத்தியை உருவாக்குதல், பாதுகாப்புத் திறன்கள் மற்றும் உள்கட்டமைப்பை நிறுவுதல்,

பணி-முக்கியத்துவ அமைப்புகள் மற்றும் தரவுகளின் பாதுகாப்பிற்காகவும், சைபர் தாக்குதல்களைக் கண்டறிதல், தடுப்பது மற்றும் தணித்தல் ஆகியவற்றுக்கு உதவும் பயனுள்ள இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் அமையும். அரசாங்க இணையதளங்கள், பயன்பாடுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு ஆகியவற்றில் நிகழும் இணையப் பாதுகாப்பு சம்பவங்கள் தொடர்பான தகவல்களைத் தொகுக்க, சைபர் பாதுகாப்பு சம்பவ மறுமொழிக் குழுவுடன் ஒருங்கிணைக்க அனைத்து மாநில அரசுத் துறைகளும் அதிகாரிகளை பரிந்துரைக்க வேண்டும். அனைத்து துறைகளிலிருந்தும் பரிந்துரைக்கப்பட்ட அலுவலர்களும் ஆண்டுதோறும் ஓரிரு நாட்கள் பயிற்சி பெற வேண்டும்.

The post டிஜிட்டல் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2.0 வெளியீடு: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Government ,Chennai ,Government of Tamil Nadu ,Information Technology Department ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...