×
Saravana Stores

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு


புதுடெல்லி: அரியானா சட்ட பேரவைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு ஆளும் பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 67 பெயர்கள் அடங்கிய பாஜ கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில் பகதூர்கர்,கலனூர், ரேவாரி உள்ளிட்ட சில தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு எதிராக அந்த கட்சியின் தலைவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். தேர்தலில் சீட் கிடைக்காததால் முன்னாள் அமைச்சர் கரண் காம்போஜ்,முன்னாள் எம்எல்ஏ லட்சுமண் நாபா ஆகியோர் அந்த கட்சியில் இருந்து விலகினர்.

இது போன்ற காரணங்களால் கட்சியில் கடும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் பாஜவுக்கு முழுக்கு போட்டுள்ளார். முன்னாள் அமைச்சரான பச்சன் சிங் ஆர்யா சபிடோன் தொகுதியில் போட்டியிடுவதற்கு தயாராகி வந்தார். அந்த தொகுதியில் போட்டியிட சமீபத்தில் ஜேஜேபி கட்சியில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்துள்ள ராம் குமார் கவுதமுக்கு கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த முன்னாள் அமைச்சர் பச்சன் சிங் நேற்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

The post தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு appeared first on Dinakaran.

Tags : ARIANA MAJI ,MINISTER ,BAJA ,New Delhi ,Ariana Legal Council ,Bajaj ,
× RELATED பாஜவுடன் கூட்டணி: இருக்கு… ஆனா, இல்ல…...