- உத்திரப்பிரதேசம்
- அரசாங்க மருத்துவமனை
- லக்னோ
- ராணி லட்சுமி பாய் அரசு
- ஜான்சி நகரம், உத்தரபிரதேச மாநிலம்
- உத்தரபிரதேசம் அரசாங்க
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் உயர் சிகிச்சை மையத்தில் இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு சுமார் 10.35 மணி அளவில் இரு அறைகளில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் அங்கிருந்த 10 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மையத்தில் மொத்தம் 54 குழந்தைகள் இருந்த நிலையில், 37 குழந்தைகள் மீட்கப்பட்டனர். 7 குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் ஆக்சிஜன் அதிகமாக இருந்த காரணத்தால் அந்த உயர் சிறப்பு சிகிச்சை மையத்தில் தீ உடனடியாக பரவி இருக்கலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே உத்தரப் பிரதேச அரசு இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்திருக்கும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post உத்தரப் பிரதேச அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பலி : ரூ.5 ;லட்சம் நிவாரணம் அறிவிப்பு!! appeared first on Dinakaran.