- என். டி. தெலுங்கு
- சித்தூர்
- சந்திரபாபு நாயுடு
- அடிவி பள்ளி அணை
- சித்தூர் நகராட்சி
- முண்டினம் சட்டமன்றத் தொடர்
- பிற்பகல்
- என். டி. தெலுங்கு தேசம் கட்சிகள்
- Balabishekam
சித்தூர் : சித்தூர் மாநகரத்திற்கு அடிவி பள்ளி அணையில் இருந்து குடிநீர் வழங்க மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் சட்டமன்றத் தொடரில் சித்தூர் மாநகரத்திற்கு அடிவி பள்ளி அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி அதற்கான அரசாணை அறிவித்தார். இதனை கொண்டாடும் வகையில் சித்தூர் காந்தி சர்க்கிள் அருகே உள்ள என்டிஆர் சிலைக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர்.
தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்எல்சி துரைபாபு தலைமையில் என்டிஆர் உருவ சிலைக்கு பாலாபிஷேகம் செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். பின்னர் அவர் பேசியதாவது: 2014ம் ஆண்டு முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். அப்போது அடிவி பள்ளி அணையில் இருந்து சித்தூர் மாநகரத்திற்கு குடிநீர் வழங்க தீர்மானம் நிறைவேற்றி அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தது.
மத்திய அரசு அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.120 கோடி மதிப்பில் அடிவி பள்ளி அணையில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் வரை பைப்லைன் மூலம் குடிநீர் வழங்க அனைத்து பணிகளும் நடைபெற்று வந்தது. அதற்குள் 2019ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதலமைச்சராக ஜெகன் மோகன் பதவியேற்றார். 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை அவர் முதலமைச்சராக ஐந்து ஆண்டுகள் பதவியேற்றார்.
அந்த ஐந்து ஆண்டுகளில் அடிவி பள்ளி அணையில் இருந்து கொண்டுவரும் குடிநீரை நிறுத்திவிட்டார். இதனால் 90 சதவீதம் நிறைவடைந்த பணிகள் கிணற்றில் போட்டது போல் ஆகிவிட்டது. 2024 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நான் முதலமைச்சரான உடன் சித்தூர் மாநகர மக்களுக்கு அடிவி பள்ளி அணையில் இருந்து குடிநீர் நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி வழங்கினார்.
அதேபோல் நேற்று முன்தினம் ஆந்திர மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் சித்தூர் எம்எல்ஏ குரஜால ஜெகன்மோகன் சித்தூர் மாநகர மக்களுக்கு குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. ஆகவே தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியான அடிவி பள்ளி அணையில் இருந்து குடிநீர் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற கூட்டத்தொடரில் தெரிவித்தார்.
உடனடியாக மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிவி பள்ளி அணையில் இருந்து சித்தூர் மாநகர மக்களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நிதியும் ஓரிரு வாரத்திற்குள் ஒதுக்கப்படும் என கூட்டத்தொடரில் தெரிவித்தார். இதனால் சித்தூர் மாநகர மக்களுக்கு நீண்ட காலமாக இருந்த குடிநீர் பிரச்சினை இனி இருக்காது. அடிவி பள்ளி அணையில் ஒரு டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த தண்ணீர் சித்தூர் மாநகர மக்களுக்கு ஒரு வருடத்திற்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது.
ஆகவே முதல்வர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாநகர மக்கள் சார்பிலும் தெலுங்கு தேச கட்சி சார்பிலும் அவருடைய உருவப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்து அதே போல் துணை முதல்வர் அவன் கல்யாண் உருவ படத்திற்கு பால் அபிஷேகம் செய்து என் டி ஆர் ஊர்வ சிலைக்கு பாலாபிஷேகம் செய்து நாங்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகிறோம்.
இந்நிகழ்ச்சியில் மேயர் அமுதா, முன்னாள் எம்எல்ஏ மனோகர், முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா, முஸ்லிம் மைனாரிட்டி தலைவர் அன்சர் பாய் உள்பட ஏராளமான கவுன்சிலருக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post சித்தூர் மாநகரத்திற்கு குடிநீர் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்ததற்கு என்.டி.ஆர் உருவ சிலைக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் பாலாபிஷேகம் appeared first on Dinakaran.