- ச.
- வடக்கு மாவட்டம் திமுகா
- தொண்டாமுத்தூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- வீட்டுவசதி அமைச்சர்
- முத்துசாமி
- கோவா வட மாவட்டம்
- தோண்டமுத்தூர் ஏ.
- ரவி, கோவை வடக்கு மாவட்டம்
- தோண்டமுத்தூர் சட்டமன்றத் தொகுதி
- வடக்கு ஒன்றியம் மதவராயபுரம்
- இகரை
- எஸ். வடக்கு மாவட்ட திமுக மக்கள் கூட்டம்
- தின மலர்
தொண்டாமுத்தூர், செப். 7: தமிழ்நாடு முதல்வர், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் வழிகாட்டுதலின் படி, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி தலைமையில் கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வடக்கு ஒன்றியம் மத்வராயபுரம், இக்கரை போளூவாம்பட்டி, ஜாகீர் நாயக்கன்பாளையம், வெள்ளிமலை பட்டணம், நரசிபுரம், தென்னமநல்லூர் ஆகிய ஆறு ஊராட்சிகளின் பொது உறுப்பினர் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் சாமி பையன் வரவேற்றார்.
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி பேசுகையில்,“கோவை வடக்கு மாவட்டத்தில், பகுதி ஒன்றிய, பேரூர் கழக பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கோவை வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் வருகிற 12ம் தேதி மாலை 4 மணிக்கு குமரன் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இக்கூட்டத்தில் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பொது உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும்’’’என்றார் இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் அப்துல் ரகுமான், மாவட்ட துணை செயலாளர் ஜெயந்தி, மருதமலை அறங்காவலர் சுகன்யா, செம்மேடு பொன்னுசாமி, சிறுபான்மை அணி உசேன், வர்த்தக அணி அமைப்பாளர் ஏ.கே.வேலுசாமி, ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் பி.ஆர்.வேலுச்சாமி, அமைப்பாளர் வக்கீல் தென்னை சிவா, முன்னாள் ஊராட்சி தலைவர் குணா, டி.எஸ். புனிதன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கிஷோர் கருணாகரன், ஒன்றிய நிர்வாகிகள், நடராஜ், வெள்ளிங்கிரி, ஸ்டுடியோ ரங்கராஜ், ஆனந்தன், காஞ்சனா தேவி, கருப்புசாமி, சிடிசி துரைசாமி, தேவராயபுரம் விஸ்வநாதன், கார்கில் சின்னராஜ், இருட்டு பள்ளம் சண்முகம், கு.நாகராஜ், ராஜா, விஜயன், தினேஷ் குமார், முருகேசன், தர்மலிங்கம், உதய மூர்த்தி, சிறுவாணி செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை, செப்.7: இந்திய தொழில் வர்த்தக சபை (ஐசிசிஐ) கோவை தொழில் அமைப்பின் 90-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.
2024-26ம் ஆண்டுக்கான புதிய தலைவராக ராஜேஷ் பி.லுந்த் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ராஜேஷ் பி.லுந்த் ஏற்கனவே கட்டுமான தேசிய தொழில் அமைப்பான (கிரெடாய்) தேசிய தலைவர், துணை தலைவர், தமிழக தலைவர், கோவை தலைவர், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் நிர்வாகியாக பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு சார்பில் இந்திய தொழில் வர்த்தக சபையுடன் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு கமிட்டியிலும் உறுப்பினராக பணியாற்றி வருகிறார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட ராஜேஷ் பி.லுந்த்துக்கு முன்னாள் தலைவர் ராமலு உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
The post பொது உறுப்பினர்கள் கூட்டம் எஸ்.எஸ்.குளத்தில் செப்.12ம் தேதி வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் appeared first on Dinakaran.