×
Saravana Stores

சென்னை ஐஐடி வழங்கும் 48 வார நிர்வாக எம்பிஏ படிப்பு தொடக்கம்


சென்னை: சென்னை ஐஐடி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரி இணைந்து 48 வார நிர்வாக எம்பிஏஏ படிப்பை வழங்கவுள்ளது. சென்னை ஐஐடி, தேசிய பாதுகாப்பு கல்லூரியுடன் இணைந்து, உத்திகள் தலைமை மற்றும் பொதுக் கொள்கை என்ற நிர்வாக எம்பிஏ படிப்பை வழங்குகிறது. 48 வார கால திட்டத்தில் இந்திய ஆயுதப்படைகள், இந்திய குடிமை பணிகள், இந்திய காவல்துறை சேவைகள் மற்றும் பிற அரசு சேவைகள், நட்பு நாடுகளின் அதிகாரிகள் தவிர 120 உறுப்பினர்களும், நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் சேர்க்கப்படுவார்கள். ஒரு ஆய்வறிக்கை உட்பட விரிவுரைகள் மற்றும் நடைமுறை தொகுதிகள் இருக்கும். சென்னை ஐஐடியின் மேலாண்மை ஆய்வுகள் துறை கடந்த ஆக 27ம் தேதி டெல்லியில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஐஐடி இயக்குநர் காமகோடி, சமகால தொழில்நுட்பங்களைப் பற்றிய ஆழமான புரிதலுடன் மேலாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய இந்த திட்டம் உருவாக்கப்பட்டதாக கூறினார். ஐஐடியின் மேலாண்மை ஆய்வுகள், விண்வெளி மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், தேசிய பாதுகாப்புக் கல்லூரியுடன் ஆசிரியர்கள் மற்றும் பாட விஷயங்களில் நிபுணர்கள் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் திட்டத்தை கற்பிப்பார்கள். படைப்பகுதித் தலைவர் மட்டத்தில் உள்ள சேவை அதிகாரிகள் அல்லது அதற்கு இணையான சிவில் மற்றும் ராஜதந்திர சேவை அதிகாரிகள் ஒன்றிய அரசின் இயக்குனர், இணைச் செயலாளர் மட்டத்தில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

The post சென்னை ஐஐடி வழங்கும் 48 வார நிர்வாக எம்பிஏ படிப்பு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : IIT Chennai ,CHENNAI ,National Defense College ,Dinakaran ,
× RELATED சென்னை ஐ.ஐ.டி.யில் விமான பாதுகாப்பு படிப்பு அறிமுகம்