- கோயம்பேடு சந்தை
- சென்னை
- விநாயகர் சதுர்த்தி
- சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்
- ஆந்திர மாநிலம்
- ஓசூர்
- திண்டுக்கல்
- மதுரை
- நிலக்கோட்டை
- திருச்சி
- சேலம்
- வேலூர்
- திருவள்ளூர்
- ஊத்துக்கோட்டை
- கோயம்பேடு
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்கள் 2 மடங்கு விலை உயர்ந்தது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம் மற்றும் ஓசூர், திண்டுக்கல், மதுரை, நிலக்கோட்டை, திருச்சி, சேலம், மதுரை, வேலூர், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் வருகின்றன. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி மற்றும் மூகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ₹900க்கும், ஐஸ் மல்லி ₹600க்கும், முல்லை மற்றும் ஜாதி மல்லி ₹400க்கும், கனகாம்பரம் ₹1500க்கும், அரளி பூ ₹200க்கும், சாமந்தி பூ ₹240க்கும், சம்பங்கி ₹450க்கும், சாக்லேட் ரோஸ் ₹230க்கும், பன்னீர் ரோஸ் ₹100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, நேற்று காலை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ மல்லி ₹1,200க்கும், ஐஸ் மல்லி ₹1100க்கும், கனகாம்பரம் ₹1600க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி ₹1000க்கும், அரளி பூ ₹300க்கும், சாமந்தி ₹250க்கும், சம்பங்கி ₹310க்கும், சாக்லேட் ரோஸ் ₹320க்கும், பன்னீர் ரோஸ் ₹200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ஆப்பிள் ₹140ல் இருந்து ₹180க்கும், சாத்துக்குடி ₹60லிருந்து ₹80க்கும், விளாங்காய் ₹70லிருந்து ₹90க்கும், பேரிக்காய் ₹100லிருந்து ₹120க்கும், மாதுளை ₹150லிருந்து ₹180க்கும், ஆரஞ்சு ₹40லிருந்து ₹60க்கும், வாழைப்பழம் ₹50லிருந்து ₹70க்கும் விற்பனை செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை புறநகரில் உள்ள கடைகளிலும் பூக்கள் மற்றும் பழங்களின் விலை பல மடங்கு உயர்ந்து காணப்பட்டது.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள், பழங்கள் விலை இரு மடங்கு உயர்வு appeared first on Dinakaran.