×
Saravana Stores

சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை: ஒன்றிய அமைச்சர் கவலை

புதுடெல்லி: சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை ஒன்றிய அமைச்சர் கவலையுடன் தெரிவித்தார். உலக பாதுகாப்பு மாநாடு டெல்லியில் கடந்த 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி ேபசுகையில், ‘நாட்டில் சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு எவ்வளவு தான் அபராதம் விதிப்பது? அபராதத் தொகையை அரசுஉயர்த்திக் கொண்டே போக முடியாது. இந்த சிக்கலுக்கு தீர்வுகாண, சாலைகளைப் பயன்படுத்துவோரின் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

சாலை விதிகளை உறுதியாக அமல்படுத்த புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறோம். விதி மீறுபவர்களுக்கு அபராதத் தொகையையும் அதிகரித்து விட்டோம். ஆனாலும் எந்த பலனும் ஏற்படவில்லை. கடந்த 2019ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தங்கள் கொண்டு வந்தது. அதன்படி அபராதத் தொகை உயர்த்தப்பட்டது. அதன்பிறகும் சாலைவிதிமீறல்கள் அதிகரித்துதான் வருகின்றன. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தலைகவசம் அணியாமல் செல்வதால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. 2022ம் ஆண்டு மட்டும் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் விபத்தில் சிக்கி 50,029 பேர் உயிரிழந்துள்ளனர்’ என்றார்.

The post சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை: ஒன்றிய அமைச்சர் கவலை appeared first on Dinakaran.

Tags : Union minister ,NEW DELHI ,EU ,World Security Conference ,Delhi ,Union Department of Road Transport ,Union ,
× RELATED முறைகேடுகள் நடப்பதை தடுக்க நீட்...