×

சேந்தமங்கலம் அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா

சேந்தமங்கலம், செப்.6: சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், அப்துல் கலாம் நண்பர்கள் குழு சார்பில் ஆசிரியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி தலைமை வகித்தார். நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா, ஆடிட்டர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர். பள்ளி நூலகத்திற்கு வரலாற்று தலைவர்கள் பற்றிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராஜா, சுரேந்திரன், ஜெகன், ராகவன் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post சேந்தமங்கலம் அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா appeared first on Dinakaran.

Tags : Teacher's Day ,Senthamangalam Government School ,Senthamangalam ,Abdul Kalam Friends Group ,Government Primary School ,Senthamangalam Municipality ,Headmaster ,Sivakami ,Friends Group ,Coordinator ,Raja ,Auditor ,Saravanan ,Dinakaran ,
× RELATED குவாரி குட்டையில் குளிக்க தடை விதிப்பு