×

சாமியார்பேட்டை கடற்கரையில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

புவனகிரி, செப். 6: பரங்கிப்பேட்டை அருகே உள்ளது சாமியார்பேட்டை கிராமம். இந்த கடற்கரை கிராமம் இயற்கை எழிலோடு இருப்பதால் தினமும் பொழுது போக்குவதற்காக ஏராளமான உள்ளூர், வெளியூர் மக்கள் இங்கு வருவார்கள். இவ்வாறு கடற்கரை அழகை ரசிக்கும் சிலர் கடலில் இறங்கி குளிப்பதும் உண்டு. கடலில் குளிப்பவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்து போகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர்கள் 4 பேர் கடலில் குளித்தபோது அதில் இருவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கடலில் குளித்த பொதுமக்கள் 6 பேரை விஷ மீன்கள் கடித்தும், முட்கள் குத்தியதாலும் காயமடைந்தனர். இந்நிலையில் கடலில் குளிப்பதால் பாதுகாப்பற்ற நிலை ஏற்படுவதாக கருதி புதுச்சத்திரம் காவல் துறையினர் எச்சரிக்கை பதாகை வைத்துள்ளனர்.சாமியார்பேட்டை கடற்கரையில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் யாரும் கடலில் இறங்கி குளிக்க கூடாது. சுழல் அலைகள் அதிகம் இருப்பதால் கடலில் இறங்கி குளிப்பவர்களுக்கு மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதால், யாரும் குளிக்க கூடாது. மேலும் விஷ மீன்கள் கூட்டம் கூட்டமாக வந்து கடலில் குளிப்பவர்களை கடிக்கிறது. அதனால் கடலில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. எனவே யாரும் கடலில் இறங்கி குளிக்க கூடாது என எச்சரிக்கை பதாகை வைத்துள்ளனர். இதனால் கடலில் குளிப்பதற்காக ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

The post சாமியார்பேட்டை கடற்கரையில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Samiyarpet beach ,Bhuvangiri ,Samiyarpet ,Parangippet ,
× RELATED தம்பதியிடம் செயின் பறிக்க முயற்சி