- பாஜக
- அஇஅதிமுக
- நாயனார் நாகேந்திரன்
- நெல்லி
- பாஜக சட்டமன்ற குழு
- ஜனாதிபதி
- நயனார் நாகேந்திரன் சட்டமன்ற
- வ aus சி
- சட்டமன்ற உறுப்பினர்
- நெல்லை
- தின மலர்
நெல்லை: அதிமுக – பாஜ இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி என பாஜ சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்தார். வஉசி பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பாஜ பணிகளை கண்காணிப்பது தொடர்பாக கட்சித்தலைமை முடிவு செய்து ஒருங்கிணைப்பு குழுவை அமைத்திருக்கிறது. அதில் எனது பெயர் இடம்பெறவில்லை. தமிழகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கேட்டு அறிவதற்காக அந்த குழு தலைவர் டெல்லி சென்றுள்ளார்.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜவுக்கு வந்துள்ள விஜயதரணிக்கு பதவி கொடுத்திருக்க வேண்டும். அதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் வருத்தப்பட வேண்டாம். வரும் காலத்தில் அவருக்கு உரிய பதவி கொடுக்கப்படும். கட்சியில் எனக்கும் பதவி இல்லை. அதிமுகவில் பல உயர்ந்த பதவிகளில் இருந்து விட்டு பாஜவுக்கு வந்தேன். பின்னர் மாநில துணைத்தலைவர் பதவி கொடுத்தார்கள். தற்போது சட்டமன்ற குழு தலைவராக மட்டும் இருக்கிறேன். அதிமுக, பாஜ இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post கட்சியில் எனக்கும் பதவி இல்லை பாஜ – அதிமுக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி: நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ ஏக்கம் appeared first on Dinakaran.