- சிபிஐ
- கெஜ்ரிவால்
- தில்லி
- சிபிஐ
- அரவிந்த் கெஜ்ரிவால்
- உச்ச நீதிமன்றம்
- கவிதா
- மணீஷ் சீஸோடியா
- விசாரணை நீதிமன்றம்
- உச்சம்
- கெஜ்ரிவால்
- தின மலர்
டெல்லி: மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிதா, மணிஷ் சிசோடியா ஆகியோர் விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என அணுகிய பிறகே உச்ச நீதிமன்றம் வந்தனர் என சிபிஐ தரப்பு வாதிட்டது. வழக்கு தொடர்பாக வாதாடுங்கள். ஜாமின் கோரி எந்த நீதிமன்றத்தை முதலில் அணுக வேண்டும் என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு தாக்கல் செய்யப்பட்ட விதத்தையே நாங்கள் எதிர்க்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றால், அதன் பிறகு வாதிட ஒன்றும் இல்லை என சிபிஐ தரப்பு வாதிட்டது. வழக்கின் விசாரணை பிற்பகலும் தொடர உள்ளது.
The post கெஜ்ரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ எதிர்ப்பு appeared first on Dinakaran.