×

மகாராஷ்டிராவில் ரூ.24 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்

மும்பை : மகாராஷ்டிராவில் 20ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. அஹிலியா மாவட்டத்தில் உள்ள சுபா சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த ஒரு வாகனத்தில் இருந்து ரூ.24 கோடி மதிப்பிலான வைரம், தங்கம், வௌ்ளி நகைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த நகைகளில் சிலவற்றுக்கு உரிய விலை பட்டியல் இல்லாததால் அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வருமான வரித்துறையிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

The post மகாராஷ்டிராவில் ரூ.24 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Mumbai ,Election Flying Squad ,Suba ,Ahiliya district ,
× RELATED மும்பையில் சோதனை என்ற பெயரில்...