- தினதையோதி முதல்வர்
- எம். க.
- ஸ்டாலின்
- சென்னை
- தியநாதயோதி
- முதல்வர்
- கே. ஸ்டாலின்
- ஆசிரியர்
- தினாதையோதி மடல்வர் மு. கே. ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள். அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு வாழ்த்துகள்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்வியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் செப்டம்பர் 5 அன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், தேசத்தின் இரண்டாவது குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்!
அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
The post ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.