- மோகனூர்
- சுப்பிரமணியன்
- மோகனூர் மாவட்டம்
- அரியூர் கிராமம்
- நாமக்கல் மாவட்ட விதைச் சான்று மற்றும் உயிர்ச் சான்றுத் துறை
- முத்துசாமி
- பழத்தோட்டம்
- மடப்பள்ளி கிராமம்
- தோட்டங்கள்
- தின மலர்
மோகனூர், செப். 5: மோகனூர் வட்டாரம், ஆரியூர் கிராமத்தில், விவசாயி சுப்ரமணியன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கடலை சான்று விதைப்பண்ணை, எஸ்.மணப்பள்ளி கிராமத்தில் முத்துசாமி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சோளம் ஆதார விதைப்பண்ணைகளை, நாமக்கல் மாவட்ட விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றுத்துறையின் உதவி இயக்குநர் சித்திரைச்செல்வி, மோகனூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஹேமலதா ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, விதைப்பண்ணையின் முக்கியத்துவம், பயிர் விலகு தூரம், பயிர்களின் எண்ணிக்கையை பராமரித்தல், ஜிப்சம் இடுவதின் முக்கியத்துவம், நுண்ணூட்டச்சத்து மேலாண்மை, பூச்சி நோய் தாக்குதல் இன்றி பராமரிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி கூறினர். ஆய்வின் போது, மோகனூர் வட்டார உதவி விதை அலுவலர் செந்தில்குமார் உடனிருந்தார்.
The post விதைப்பண்ணைகளில் உதவி இயக்குநர் ஆய்வு appeared first on Dinakaran.