×
Saravana Stores

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது உத்தரவை ரத்து செய்ய கோரி ஜாபர் சாதிக் மனு: அமலாக்கத்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருளை கடத்தல் வழக்கில், ஜாபர் சாதிக்கை, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்சியில் கைது செய்தனர். இதையடுத்து, சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் ஜாபர் சாதிக் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு, மனுவுக்கு அமலாக்கத்துறை, திஹார் சிறை நிர்வாகம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

The post சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது உத்தரவை ரத்து செய்ய கோரி ஜாபர் சாதிக் மனு: அமலாக்கத்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Jaber Sadiq ,CHENNAI ,Chennai High Court ,Zafar Sadiq ,Zabar Sadiq ,Dinakaran ,
× RELATED என்எல்சி – ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனை வழக்கு: ஐகோர்ட் உத்தரவு