×

மதுரையில் மின்சாரம் தாக்கி கேங் மேன் சாவு

 

மதுரை, செப். 4: மதுரை சிம்மக்கல் அபிமன்னன் சந்தை சேர்ந்தவர் பாலாஜி (39). இவர் கே.புதூர் மின்வாரிய அலுவலகத்தில் கேங்க் மேனாக வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று மின்சார பழுது வேலை பார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சரண்யா (35) அளித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post மதுரையில் மின்சாரம் தாக்கி கேங் மேன் சாவு appeared first on Dinakaran.

Tags : Madura ,Madurai ,Balaji ,Simmakkal Abimannan Market ,K. ,Putur ,Dinakaran ,
× RELATED கண்மாய்களில் இருந்து வெளியேறும்...