×
Saravana Stores

சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 17ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் 7 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை முடிந்து மீண்டும் வரும் 17 ம் தேதிவரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கப்பட்டார். சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனரும், பாஜக கூட்டணி கட்சியைச் சேர்ந்தவருமான தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இந்த மூன்று பேரையும் 10 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

அந்த மனுவில், வழக்கில் தொடர்புகள் குறித்தும், யார் யாருக்கு நிதி சென்றுள்ளது, எங்கு முதலீடு செய்யபட்டுள்ளது என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதால், மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த மனு நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி மலர் வாலன்டினா முன்பு தேவநாதன் உட்பட 3பேரும் நேரில் ஆஜர்படுத்தபட்டனர். இதனையடுத்து நீதிபதி, மூவரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.இந்தநிலையில் போலீஸ் விசாரணை முடிந்து இன்று மீண்டும் புழல் சிறையிலடைக்கப்பட்டனர்.

The post சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 17ம் தேதி வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Devanathan ,Chennai ,Mailapur ,Devanathan Yadav ,Mayilapur ,The Mailapur Hindu ,Dinakaran ,
× RELATED மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு...