×

பயிற்சியாளர் காம்பீர் நிச்சயம் வீரர்களுக்கு துணையாக இருப்பார்: சேவாக் சொல்கிறார்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து சேவாக் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். அதில், “ஒரு பயிற்சியாளராக காம்பீருக்கு எந்த பெரிய சவாலும் இல்லை. ஏனென்றால் இந்திய அணியில் இருப்பது தொழில் முறை கிரிக்கெட் வீரர்கள். அதுமட்டுமல்லாமல் தற்போது தான் டி20 உலக கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று இருக்கிறார்கள். வீரர்களுக்கு தாங்கள் என்ன செய்ய வேண்டும். தங்களுடைய பொறுப்பு என்ன என்பதெல்லாம் நன்றாகவே தெரியும். அது மட்டும் இல்லாமல் காம்பீரின் வருகைக்கு பிறகு இன்னும் அதிகமான தெளிவு வீரர்களுக்கு கிடைக்கும்.

உன்னுடைய பணி இதுதான். நீ இதை செய்தால் இந்திய அணிக்கு இத்தகைய நன்மை கிடைக்கும் என்பதை எல்லாம் காம்பீர் அழகாக எடுத்துரைப்பார். கம்பீருக்கான சவால்கள் குறைவுதான். ஆனால் வீரர்களுக்கான சவால்கள் தான் அதிகம். தற்போது டி20 உலக கோப்பை வென்றிருப்பதால் சாம்பியன்ஸ் கோப்பை அல்லது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இது அனைத்தையும் வீரர்கள் தான் தாங்கிக் கொள்ள வேண்டும். எனவே எப்போதுமே பயிற்சியாளர்களை விட வீரர்களுக்குதான் அதிக சவால்கள் இருக்கும். காம்பீர் தற்போது பயிற்சியாளராக இருப்பதால் நிச்சயம் வீரர்களுக்கு துணையாக இருப்பார்’’ என்று தெரிவித்துள்ளார்.

The post பயிற்சியாளர் காம்பீர் நிச்சயம் வீரர்களுக்கு துணையாக இருப்பார்: சேவாக் சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Coach ,Gambhir ,Sehwag ,Mumbai ,Gautam Gambhir ,Indian cricket team ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…