×

95வது முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி சென்னையில் செப்.19ல் தொடக்கம்

சென்னை: முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டியின் 95வது தொடர் சென்னையில் நாளை மறுநாள் தொடங்குகிறது. நாட்டின் பழமையான ஹாக்கி தொடரான எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள ஹாக்கி அரங்கில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரயில்வே உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த அணிகள் ஏ, பி என இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி ஆட்டங்கள் செப்.28ம் தேதி நடைபெறும். சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பைனல் செப்.29ம் தேதி நடக்கும். ஏ பிரிவு : இந்தியன் ரயில்வே, இந்திய ராணுவம் (சிவப்பு), பாரத் பெட்ரோலியம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா. பி பிரிவு: கர்நாடகா, இந்தியன் ஆயில், என்சிஓஈ போபால், மத்திய தலைமைச் செயலகம், ஒடிஷா.

The post 95வது முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி சென்னையில் செப்.19ல் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : 95th Murukappa Gold Cup of Hockey ,Chennai ,Murukappa Gold Cup ,MCC ,Murukappa Gold Cup hockey ,Egmore Hockey Arena, Chennai ,95th Murugappa Gold Cup Hockey ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…