- திருச்சி
- அமைச்சர்
- மா. சுப்பிரமணியன்
- சுகாதார அமைச்சர்
- சுப்பிரமணியன்
- பரிசுத்த தந்தை
- திரிஷி
- மா சுப்பிரமணியன்
திருச்சி: திருச்சியில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சீன நிறுவனத்தின் நூடுல்ஸ் மற்றும் குளிர்பானம் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்ததையடுத்து 800 கிலோ காலாவதியான சீன நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “திருச்சி அரியமங்கலம் பகுதியில் சைனீஸ் புல்டாக் என்ற நூடுல்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அந்த நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரை கண்டுபிடித்து அவரிடம் இருந்து காலாவதியான 800 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில் குரங்கம்மை நோய்க்கு தொடர்ந்து பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. 27,000 பயணிகள் இதுவரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். திருச்சி, சென்னை, மதுரை, கோவை ஆகிய நான்கு இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக குரங்கம்மை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு இல்லாதவகையில் இந்த ஆண்டு உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 11,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்” என தெரிவித்தார்.
The post திருச்சியில் உள்ள ஒரு மொத்த விற்பனையாளரிடம், 800 கிலோ காலாவதியான சீன நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்: அமைச்சர் மா. சுப்ரமணியன் appeared first on Dinakaran.