×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக உள்ளதால் அருவிகள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் மற்றும் பரிசல் இயக்கவும் தடை

தருமபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 22,000 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி ஒக்கேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்தது. இதனால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த 3 நாட்களாக கபினி நீர்பிடிப்பு பகுதி மற்றும் மண்டியா மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளன.

இதனால், அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.நேற்று காலை கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 22 ஆயிரத்து 529 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில், தமிழக காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு இன்று மேலும் அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், ஆற்றில் குளிக்கவோ, பரிசல் இயக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக உள்ளதால் அருவிகள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் மற்றும் பரிசல் இயக்கவும் தடை appeared first on Dinakaran.

Tags : Okanakal Kaviri River ,Tarumpuri ,Okanakal Caviri ,Karnataka ,Okanakkal ,Okanakal Khaviri River ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து...